திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறியால் பொது மக்கள் பீதி

Robbery News | Villupuram News
X
Robbery News -விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதிகளில் தொடர் திருட்டு கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Robbery News -விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் காமாட்சி. இவர் திண்டிவனம் சேடன்குட்டை தெருவில் டைலர் கடை நடத்தி வருகிறார்.இவர் திண்டிவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வட ஆலப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. இதையடுத்து சாலை ஓரம் நிறுத்தி செல்போன் பேசினார்.இதனை சாதகமாக பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் காமாட்சி அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர்.

அதே போன்று திண்டிவனம் பகுதியை சேர்ந்த சித்ரா, தனது கணவர் செல்வத்துடன் கோனேரிகுப்பத்தில் இருந்து தனது உறவினரின் வீட்டில் இருந்து திண்டிவனத்திற்கு வந்து கொண்டிருந்தனர் . அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சித்ரா கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயற்சி செய்தார்.அதிர்ச்சி அடைந்த சித்ரா கூச்சலிட்டதால் அங்கு இருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

அதேபோல திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த சம்யுக்தா தனது கணவர் சத்யராஜ் என்பவருடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இருந்து பட்டணம் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பட்டணம் அருகே இவர்களை பின் தொடர்ந்த மர்மநபர்கள் அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து திண்டிவனம், ரோசனை, வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் மற்றும் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த தொடர் சம்பவங்களால் ரோசனை இன்ஸ்பெக்டர் பிருந்தா, திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையான போலீசார் திண்டிவனம், செஞ்சி ரோடு,சந்தைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து அப்பகுதிகளில் நடந்து வரும் திருட்டு, கொள்ளை, வழிப்பறிகளால் பீதி அடைந்துள்ளனர் அதனால் காவல்துறை விழித்தெழவேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது