திண்டிவனம் தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திண்டிவனம் தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X
திண்டிவனம் தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திண்டிவனம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் சீத்தாபதி சொக்கலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். திண்டிவனம் தொகுதியில் 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ள சீத்தாபதி சொக்கலிங்கம், தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறாா்.

இவா் மரக்காணம் கடவம்பாக்கம், ஆவணிப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது ஒலக்கூா் ஒன்றிய திமுக செயலா் பாங்கை சொக்கலிங்கம் தலைமையில் திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் உடன் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தனா்.

Tags

Next Story
ai future project