திண்டிவனத்தில் சிறையில் இருக்கும் திமுக வேட்பாளர் வெற்றி

திண்டிவனத்தில் சிறையில் இருக்கும் திமுக வேட்பாளர் வெற்றி
X

பாபு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தேர்தலில் ஏற்பட்ட தகராறில் சிறைக்கு சென்றுள்ள திமுக வேட்பாளர் பாபு வெற்றி பெற்று உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி 13-வது வார்டில் திமுக சார்பில் பாபு (39) போட்டியிட்டார். கடந்த 19-ம் தேதி வாக்குப் பதிவின்போது, இவரது தரப்புக்கும் அதிமுக வேட்பாளர் சுதா தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பாகவும் மாறியது. இதுகுறித்த புகாரில் ரோஷனை காவல் துறையினர் இரு தரப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து திமுக வேட்பாளர் பாபு உள்பட 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைையில் திண்டிவனம் நகராட்சியில் 13-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுதாவை விட, கூடுதல் வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பாபு வெற்றி பெற்றார். தேர்தல் தகராறில் சிறைக்கு சென்றதால், வெற்றியை அவரால் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!