விழுப்புரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமரா

விழுப்புரம் மாவட்டத்தில்  பதற்றமான வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமரா
X
விழுப்புரம் மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 282 வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது

நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவின் போது எந்தவித அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சியில் உள்ள 129 வாக்கு சாவடிகளில், 26 வாக்கு சாவடிகளில் வெப் கேமராவும் 103 வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

திண்டிவனம் நகராட்சியில் உள்ள வாக்கு சாவடிகளில், 7 வாக்கு சாவடிகளில் வெப் கேமராவும் 59 வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

கோட்டகுப்பம் நகராட்சியில் உள்ள வாக்கு சாவடிகளில், 7 வாக்கு சாவடிகளில் வெப் கேமராவும் 21 வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

அனந்தபுரம் பேரூராட்சியில் உள்ள வாக்கு சாவடிகளில், 3 வாக்கு சாவடிகளில் வெப் கேமராவும் 12 வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உள்ள வாக்கு சாவடிகளில், 1 வாக்கு சாவடியில் வெப் கேமராவும் 10 வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

செஞ்சி பேரூராட்சியில் உள்ள வாக்கு சாவடிகளில், 7 வாக்கு சாவடிகளில் வெப் கேமராவும் 25 வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

மரக்காணம் பேரூராட்சியில் உள்ள வாக்கு சாவடிகளில், 4 வாக்கு சாவடிகளில் வெப் கேமராவும் 16 வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் உள்ள வாக்கு சாவடிகளில், 3 வாக்கு சாவடிகளில் வெப் கேமராவும் 12 வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

வளவனூர் பேரூராட்சியில் உள்ள வாக்கு சாவடிகளில், 4 வாக்கு சாவடிகளில் வெப் கேமராவும் 12 வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி பேரூராட்சியில் உள்ள வாக்கு சாவடிகளில், 3 வாக்கு சாவடிகளில் வெப் கேமராவும் 11 வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story