அனைத்து ஊராட்சிகளிலும் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

அனைத்து ஊராட்சிகளிலும் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்
X

மாதிரி படம்

விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது, இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன,

இந்நிலையில் தென்பெண்ணை, வராக நதி, மலட்டாறு, மற்றும் பம்பை போன்ற கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது பண்டிகை மற்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால், அணைக்கட்டுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர். மேலும், குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ஆர்வ மிகுதியால் போதிய நீச்சல் பயிற்சி இன்றி, நீர்நிலைகளின் ஆழம் குறித்து அறியாமல் நீர்நிலைகளில் இறங்கி குளிகின்றனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம், மேல்மலையனூர் செவலபுரை, கண்டமங்கலம் அருகே சொரணாவூர் ஆகிய இடங்களில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி சிலர் இறந்துள்ளனர். மேலும் பருவமழை நீடிக்கும் என்பதால், மாவட்டத்தில் ஏரி, குளங்கள்,குட்டைகள் நிரம்பி வழியும். அதே போல ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தற்போதைய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், மாணவ, மாணவர்களிடம் போதிய தற்காப்பு நீச்சல் பயிற்சியும் இல்லை, அதனால் அங்கு நிகழும் நீர்நிலை விபத்துகளில் மாட்டி கொண்டவர்களை காப்பற்ற முடியாத அசாதாரண சூழ்நிலை மாவட்டம் முழுவதும் ஏற்பட்டு அதன் மூலம் மீட்பு குழுவினர் வருவதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்கள், மூழ்கியவர்கள் உடல்கள் சடலமாக மீட்கும் நிலை தான் தொடர்ந்து வருகிறது, இது ஆண்டுதோறும் பருவமழையின் போது ஒரு சிலர் தண்ணீரில் மூழ்கியும், ஆற்று நீரில் அடித்துச் சென்று உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளின் கரையோரம் உள்ள ஊராட்சி தலைவர்கள் மூலம் அந்தந்த ஊராட்சிகளின் பொது மக்களிடையே தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் நீர்நிலைகளின் ஆபத்து குறித்தும், அங்கு செல்லும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இப்பணியில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், சம்மந்தப்பட்ட காவல்துறையினர், ஊரக வளர்ச்சி துறை, நீர்வள ஆதார பொதுப்பணித்துறை ஆகியன இணைந்து இப்பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், குறைந்தபட்சம் இந்த பருவமழை காலத்தில் உயிரிப்புகளை தடுக்கலாம். மேலும் அபாயகரமான மக்கள் அதிகளவில் கூடும் நீீீர் நிலைைைளை கண்காணித்து அங்கு இந்த பருவ மழை காலம் முடியும் வரை 108 அவசர ஊர்தி மற்றும் இயற்கை மீட்பு குழுவினரை நிறுத்த வேண்டும்.

இதன் மூலம் நீீீர்நிலைகளை கண்காணிப்பு செய்வதோடு, அங்கு ஏற்படும் விபத்துகளில் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்க்கலாம், உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!