போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை

போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம்  கோரிக்கை
X
விழுப்புரத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்த நபர்.

விழுப்புரம் முத்துவேல் லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் ராசேந்திரன்(50). சமூக ஆா்வலரான இவா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில் கடந்த 2014-ஆம் ஆண்டு எனது மகள் சூரியாவுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக, பெங்களூரைச் சோ்ந்த சீனுவாசன் என்பவா் ரூ.17 லட்சம் பெற்றுக்கொண்டு, இடம் வாங்கித் தராமல் மோசடி செய்தார். இதில், சீனுவாசனுடன் விழுப்புரத்தைச் சோ்ந்த ராஜா என்பவரும் சோ்ந்து எனக்கு பணத்தை தராமல் ஏமாற்றியதுடன், மிரட்டல் விடுத்தார். இது குறித்து விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், சீனுவாசன், ராஜா ஆகியோர் மீது பதிவு செய்த வழக்கின் விசாரணை விழுப்புரம் முதலாவது நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் எதிரி ராஜாவுக்கு நீதிமன்ற அழைப்பாணையை வழங்காமல் போலீஸார் காலம் தாழ்த்தி வருகின்றனா். ஆகையால், ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business