விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை கரண்ட் கட்

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை கரண்ட் கட்
X
விழுப்புரம் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சொர்ணாவூர் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏ. ஆர். பாளையம், துலுக்கநத்தம், தொட்டி, காட்டு குட்டை, பாக்கம் ஆகிய கிராம பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அதேபோல் விழுப்புரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்சி மெயின் ரோடு, நாராயணன்நகர், சேர்மன் சிதம்பரம் தெரு, சுதாகர்நகர், சரஸ்வதி அவன்யூ, முல்லைதெரு, கண்ணன் நகர், திருவாமத்தூர், பானாம்பட்டுரோடு, என். என். பாளையம், கே.ஜி.பாளையம், ராகவன்பேட்டை,ஆனாங்கூர், சாமிப்பேட்டை, பாளையம், பி. குச்சிபாளையம் ஆகிய கிராம பகுதிகளிலும்,

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விழுப்புரம் அருகே உள்ள அரியலூர், டெட்நகர், கோழிப்பட்டு, மல்லிகை பட்டு, மாம்பழப்பட்டு, காங்கேயனூர், கருங்காலிப்பட்டு, பள்ளிந்தூர், ஆயந்தூர், ஓரத்தூர், கொசப்பாளையம், தும்பூர், தாங்கள், அசோகபுரி, லட்சுமிபுரம், கஸ்பா கரணை, ஆகிய கிராம பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சினூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பில்லூர், கொளத்தூர், காவணிப்பாக்கம், சித்தார்த்தூர், சேர்ந்தனூர் புருஷானூர், ஆனாங்கூர், அத்தியூர் திருவாதி, தென்குச்சிபாளையம், திருப்பாச்சனூர், தளவானூர், வேலியம்பாக்கம், வி. அரியலூர், சாமி பேட்டை, பிள்ளையார்குப்பம், கொங்கரங் கொண்டான், ராமநாதபுரம், அரசமங்கலம் ஆகிய கிராமப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அதேபோல் விக்கிரவாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குத்தாம்பூண்டி, வ. உ. சி. நகர், பாரதிநகர், கீழக்கொந்தை, வி. சாலை, பனையபுரம், அடைக்கலாபுரம், பனப்பாக்கம், ஆவுடையார்பட்டு, கயத்தூர், கப்பியாம்புலியூர், சிந்தாமணி, ரெட்டிகுப்பம், மண்டபம், அய்யூர்அகரம், வடக்குச்சிபாளையம் ஆகிய கிராம பகுதியில் மின்சாரம் இருக்காது.

அதேபோல் வளவனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சாலையம்பாளையம், ஓட்டேரிபாளையம், வாணியம்பாளையம், சுந்தரிபாளையம், பஞ்சமாதேவி, ப. வில்லியனூர், ஏ. கே. குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, வடவாம்பலம், வி. மடம், வி. அகரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர்கள் சிவகுரு, சைமன் சார்லஸ் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!