தடுப்பூசி போட்டதால் பெண் இறந்ததாக கூறி சாலை மறியல்

தடுப்பூசி போட்டதால் பெண் இறந்ததாக கூறி சாலை மறியல்
X

செஞ்சி-சேத்துப்பட்டு சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தடுப்பூசி போட்டதால் பெண் மரணமடைந்ததாக கூறி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட மகாதேவிமங்கலம் அருகே மதுரா கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி விஜயா (37). இவர் புதன்கிழமை அதே பகுதியில் நடந்த நூறுநாள் வேலைக்கு சென்று உள்ளார். அங்கு அவருக்கு கொரொனா தடுப்பூசி போட்டு உள்ளனர், அப்போது அவருக்கு அங்கேயே லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது,

இதனை பொருட்படுத்தாமல் அவர் வீட்டிற்கு வந்து உள்ளார், இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு அதிகமானதால் உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்,.அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்,

இதனை அறிந்த அக்கிராம பொதுமக்கள் செஞ்சி-சேத்பட் சாலையில் சண்டி சாட்சி என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!