பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செஞ்சியில் ஆர்ப்பாட்டம்

பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செஞ்சியில் ஆர்ப்பாட்டம்
X

செஞ்சியில் பா.ஜ.கட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

செஞ்சியில் பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்து, கார் எரித்த பாஜக குண்டர்களை கண்டித்து விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு மற்றும் பாஜகவினரை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரசெயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.

ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் என் சுப்பிரமணியன்,செயற்குழு உறுப்பினர் எஸ்.கீதா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர், ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கே.மாதவன்,வட்ட செயலாளர் சிவன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்