அனுபவ பாத்தியதை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா

அனுபவ பாத்தியதை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா
X

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு தர்ணாவில் ஈடுபட்டவர்

செஞ்சி பேரூராட்சி, தேசூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி, தேசூர்பேட்டை பகுதியில் வசிப்பவர் முனுசாமி, இவர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திடீரென தனக்கு நியாயம் வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் செஞ்சி பேரூராட்சி எல்லையில் தேசூர்பேட்டை பகுதியில் அரசு புறம்போக்கில் காலகாலமாக கூரை வீடு கட்டி வசித்து வருவகிறேன், எனக்கு மாற்று இடம் கூட வழங்காமல் அந்த இடத்தில் இருந்து என்னை வெளியேற்றி, அந்த இடத்தை அனுபவ பாத்தியதை இல்லாத ஒரு தனி நபருக்கு வருவாய் துறை பட்டா வழங்கி உள்ளனர். அதனை ரத்து செய்து தனக்கு பட்டா வழங்க வேண்டும் என கூறினார்.

உடனடியாக அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!