செஞ்சி அருகே குடிநீர் கிணற்றில் குழந்தையின் சடலம்

செஞ்சி அருகே குடிநீர் கிணற்றில் குழந்தையின் சடலம்
X
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடிநீர் கிணற்றில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் சடலம் கிடந்ததால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட ஆணத்தூர் கிராமத்தில் கௌசல்யா என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் கிணற்றில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை சடலமாக இருப்பதாக துப்புரவு பணியாளர் இந்திரா காந்தி ஆனத்தூர் விஏஓவிற்கு தகவல் தெரிவித்தார்,

செஞ்சி காவல் நிலையத்திற்கு விஏஓ தகவல் தெரிவித்தையடுத்து செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண் குழந்தையின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து யார்? குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு சென்றது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story