கோயில் நிலம் ஆக்ரமிப்பு, கிராம மக்கள் உண்ணாவிரதம்

கோயில் நிலம் ஆக்ரமிப்பு, கிராம மக்கள் உண்ணாவிரதம்
X

கோயில் நிலம் ஆக்ரமிப்பு கிராம மக்கள் உண்ணாவிரதம்

செஞ்சி அருகே கீழ் மாம்பட்டில் கோயில் நிலத்தை தனி நபர்கள் ஆக்ரமிப்பு செய்துள்ளதை கண்டித்து அக்கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மாம்பட்டு கிராமத்தில் கோயில் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பதை கண்டித்தும், வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியும் நடவடிக்கை எடுத்து கோயில் நிலத்தில் தனிநபர் ஆக்ரமிப்பை அகற்றி கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி அக்கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி