குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
X

 குண்டர் சட்டத்தில் கைதான குமார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்

தொடர் குட்கா விற்பனை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் விற்றவர் தடுப்புக்காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, நல்லாண்பிள்ளைபெற்றால் புது பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் குமார் (49). இவர் மீது குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகையிலை பொருட்களை விற்பனை செய்த வழக்கில் குமாரை நல்லாண்பிள்ளைபெற்றால் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவருடைய குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தில் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் குமாரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil