மேல்மலையனூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்

மேல்மலையனூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்
X

மேல்மலையனூரில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அலுவலகத்தில் மனுகொடுத்து ஆர்ப்பாட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் வி.எய்யில்ராஜா தலைமை தாங்கினார், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி,மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன் விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டத்தில் கனமழையால் பாதிக்கபட்ட அனைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,

நெல் சாகுபடி செய்து முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000/ வழங்க வேண்டும்,மாநில அரசு கோரியுள்ள பேரிடர் நிதியை பா.ஜ.க அரசே உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.மாவட்ட துணைத்தலைவர் கோ.மாதவன், டி.காண்டீபன்,டி.சுரேஷ் உட்பட.

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!