இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த கலெக்டர் மோகன்

இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த கலெக்டர் மோகன்
X

செம்மேடு கிராமத்தில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தில் இளைஞர்களை ஊக்கப்படுத்த கிரிக்கெட் விளையாடிய ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மோகன் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செஞ்சி அருகே செம்மேடு என்ற கிராமத்தின் வழியாக சென்ற போது அங்கு இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்த ஆட்சியர் உடனடியாக காரை நிறுத்தி அங்கே இறங்கி இளைஞர்களுடன் உரையாடினார்.

பின்னர் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளைஞர்களுடன் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார், இந்த செயல் மாவட்டம் முழுவதும் பரவி ஆட்சியர் மோகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Tags

Next Story