மேல்மலையனூரில் வரும் நவ.15-ந்தேதி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேல்மலையனூரில் வரும் நவ.15-ந்தேதி விவசாய தொழிலாளர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்
X

அவலூர்பேட்டையில் இன்று நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 10வது மாநாடு.

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வரும் நவம்பர் 15ஆம் தேதி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக வட்ட மாநாட்டில் இன்று முடிவு செய்தனர்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டையில் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மேல்மலையனூர் வட்டத்தின் பத்தாவது மாநாட்டில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த தீர்மானித்து முடிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட அவலூர்பேட்டையில் இன்று (அக்டோபர் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை) மேல்மலையனூர் வட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பத்தாவது மாநாடு நடைபெற்றது, மாநாட்டிற்கு வட்ட நிர்வாகி என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநாட்டில் மாவட்டத் தலைவர் வி.அர்ஜுனன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.

தொடர்ந்து மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக வட்டத் தலைவராக சி.ரவிச்சந்திரன், வட்ட செயலாளராக சி.குமார், வட்ட பொருளாளராக என்.சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட 7 வட்ட நிர்வாகிகள் மற்றும் 15 பேர் கொண்ட வட்ட குழு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் 100 நாள் வேலையை 200 நாள் ஆக்கி, ரூபாய் 600 கூலியை உயர்த்த வேண்டும், அரசு புறம்போக்கில் நீண்ட நாட்களாக குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர். மேலும் இந்த கோரிக்கைகளை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அதனை வலியுறுத்தி வரும் நவம்பர் 15- ந்தேதி மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதென மாநாட்டில் முடிவெடுத்தனர்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் 10-வது கோரிக்கை மாநாடு அரகண்டநல்லூர், ஜே. பி. மஹால், ரங்கநாதன் நினைவரங்கத்தில் நடைபெற்றது.

அந்த மாநாட்டிற்கு வட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் கலந்து கொண்டு மாநாடு குறித்து சிறப்புரையாற்றினார். மாநாட்டில் மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் எஸ்.அபிமண்ணன் கட்சி வட்ட செயலாளர் எஸ். கணபதி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் வே.உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர்.

மாநாட்டில் அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து 30 கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக செல்லும் கொல்லுரான்,அந்திலியான் வாய்க்காலை தூர் வாரி, இரு கரைகளை பலபடுத்தி உடனடியாக சீரமைக்க வேண்டும்,100 நாள் வேலையை 150 நாளாக்கி 283 கூலியை 383 ரூபாய் கூலியாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

மாநாட்டில் புதிய வட்ட நிர்வாகிகளாக தலைவராக எம்.செல்வராஜ், செயலாளராக ஏ.ஏழுமலை பொருளாளராக எம்.பாபு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!