விழுப்புரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர்களை தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சியில் திமுக நகர்மன்றத் தலைவராக தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த சித்திக் அலி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இருவருக்கும், அமைச்சர் முனைவர் பொன்முடி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், நகர்மன்றத் தலைவர் தமிழ்செல்வியை அவரது அறையில் உள்ள இருக்கையில் அமர செய்து வாழ்த்தினார். அப்போது, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 7 பேரும் தேர்தலை புறக்கணித்துவிட்டனர். அதேநேரத்தில் பாமக உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
திண்டிவனம் நகராட்சியில் நகர் மன்றத் தலைவராக நிர்மலா (திமுக), துணைத் தலைவராக ராஜலட்சுமி வெற்றிவேல் (விசிக) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், கோட்டக்குப்பம் நகராட்சியில் நகர்மன்றத் தலைவராக எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி (திமுக), துணைத் தலைவராக ஜீனத் பீவி (திமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோல, 7 பேரூராட்சிகளிலும் திமுகவை சேர்ந்தவர்களே தலைவர், துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
வளவனூர் பேரூராட்சியில் தலைவராக மீனாட்சி ஜீவா, துணைத் தலைவராக அசோக்,
விக்கிரவாண்டி பேரூராட்சியில் தலைவராக அப்துல் சலாம், துணைத் தலைவராக பாலாஜி
செஞ்சி பேரூராட்சியில் தலைவராக மொக்தியார் அலி மஸ்தான், ராஜலட்சுமி, மரக்காணம் பேரூராட்சியில் தலைவராக வேதநாயகி ஆளுவந்தான், துணைத் தலைவராக பலராமன்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் தலைவராக அஞ்சுகம் கணேசன், துணைத் தலைவராக ஜோதி,
அரகண்டநல்லூர் பேரூராட்சியில் தலைவராக அன்பு, துணைத் தலைவராக கஜிதாபீவி,
அனந்தபுரம் பேரூராட்சியில் தலைவராக முருகன், துணைத் தலைவராக அமுதா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் வெற்றிபெற்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைக்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu