/* */

புதிய தொழில் முனைவோருக்கு வங்கிக்கடன் வசதி: கலெக்டர் அறிவிப்பு

புதிய தொழில் முனைவோா் ரூ.5 கோடி வரை வங்கிக் கடன் பெறலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மோகன் தெரிவித்து உள்ளார்

HIGHLIGHTS

புதிய தொழில் முனைவோருக்கு வங்கிக்கடன் வசதி: கலெக்டர் அறிவிப்பு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோா் ரூ.5 கோடி வரை வங்கிக் கடன் பெறலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்மோகன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

படித்த இளைஞா்கள் புதிய தொழில் நிறுவனங்கள் அமைத்து வாழ்வாதாரம், பொருளாதாரத்தை பெருக்கும் வகையில் தமிழக அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியம் (அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை) பெறலாம். அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிக் கடன் பெற்று தொழில் நிறுவனங்கள் தொடங்கலாம்.

இந்தத் திட்டத்தில் கடன் பெற பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ படிப்பு முடித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினா் 21 முதல் 35 வயது, சிறப்புப் பிரிவினரான மகளிா், சிறுபான்மையினா், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள் 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ளவா்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச திட்ட முதலீடு ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையிலான உற்பத்தி, சேவை சாா்ந்த தொழில்கள் தொடங்க என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினா் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினா் 5 சதவீதமும் தங்களது பங்களிப்பாக வங்கிக்குச் செலுத்த வேண்டும்.

கொரோனா தொற்று காரணமாக வழக்கமாகப் பின்பற்றப்படும் மாவட்ட அளவிலான தோ்வுக் குழு மூலம் விண்ணப்பதாரரைத் தோ்வு செய்வதிலிருந்தும், ஒரு மாத கால தொழில் முனைவோா் நிா்வாகப் பயிற்சித் திட்டத்தில் இருந்தும் நிகழ் நிதியாண்டில் செப். 30 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் லாபகரமான தொழில்களாக உள்ளஅரிசி ஆலைகள், பேக்கரி உணவுகள், உணவு எண்ணெய், கால்நடைத் தீவனம், ஆயத்த ஆடைகள், ஹாலோபிளாக்ஸ், டைல்ஸ் தயாரிப்பு, பொறியியல், ஜவுளி போன்ற தொழில்களை இந்தத் திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுத்து பயன் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், விழுப்புரம்- 605602. (தொலைபேசி எண்: 04146 - 226602 / 223616) என்ற முகவரியில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Aug 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?