திமுகவில் 2 சதவீதம் வாரிசு அரசியல் - பொன்முடி

திமுகவில் 2 சதவீதம் வாரிசு அரசியல் - பொன்முடி
X

திமுகவில் 2 சதவீதம் மட்டுமே வாரிசு அரசியல் இருப்பதாக விழுப்புரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறினார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் அணி (ம) தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி சார்ந்த நிர்வாகிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு பணி குறித்த ஆலோசனை கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி கூறும்போது, 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே திமுகவில் வாரிசு அரசியல் உள்ளதாகவும், அதே போன்று தான் அதிமுகவிலும் வாரிசு அரசியல் உள்ளதாக கூறினார்.மேலும் எம்ஜிஆரின் ஆட்சியை கொண்டு வருவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது கிடையாது எனவும் காலில் விழுந்து முதலமைச்சராக ஆக வேண்டிய அவசியம் திமுகவில் இல்லை என தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்