மரக்காணத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

மரக்காணத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
X

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மீனவர்கள் பகுதியில் 16ஆம் ஆண்டு சுனாமி தினம் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டதையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி ஆழிப்பேரலை தாக்கியதன் காரணமாக பல்லாயிரம் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனை நினைவு கூறும் வகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதில் உள்ள புதுக்குப்பம் நீக்கிய குப்பம் வசவன் குப்பம் கண்டிகுப்பம் உள்ளிட்ட 19 மீனவர் பகுதியிலும் 16ஆம் ஆண்டு சுனாமி தினம் நிணைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் உயிர் இழந்தவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இது போல் மீனவர்கள் ஒன்று சேர்ந்து சுனாமியால் உயிர் இழந்த அனைத்து ஆத்மாக்களும் சாந்தி அடையும் வகையில் கடலில் சென்று மலர் தூவி, பால் ஊற்றி கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தையொட்டி அனைத்து மீனவர்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பித்தக்கது.

Tags

Next Story