வேலூர்: பெண் வியாபாரி தாக்கியதாக தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!
வேலூரில் தூய்மைப்பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
வேலூர் மண்டித்தெரு , கிருபானந்தவாரியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இன்று கொரோனா தடுப்பு விதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர் . அப்போது மண்டித்தெருவில் தள்ளுவண்டியில் வியாபாரிகள் பழம் விற்றுக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற சுகாதார ஆய்வாளர், நீங்கள் பழம் விற்பனை செய்வதற்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் விதிமீறி எதற்காக இங்கு விற்பனை செய்கிறீர்கள் . இதேபோல் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் . பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார் . அங்கிருந்த பெண் பழவியாபாரி கீதா என்பவர் , மாநகராட்சி அதிகாரிகள் குறித்து திட்டிக்கொண்டிருந்தாராம் .
அப்போது அவ்வழியாக சென்ற தூய்மை பணியாளர் சாந்தகுமாரி என்பவர் எதற்காக திட்டுகிறீர்கள் அதிகாரிகள் கடமையை செய்கிறார்கள் எனக்கூறினாராம் . இதனால் ஆத்திரமடைந்த வியாபாரி கீதா, சாந்தகுமாரியை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினாராம் . இதில் சாந்தகுமாரி காயமடைந்தார் .
மேலும் அவர் மயங்கி விழுந்தார் . இது குறித்து தகவலறிந்த தூய்மை பணியாளர்கள்யாளர் 50 க்கும் மேற்பட்டோர் வியாபாரியை கண்டித்து , அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் , தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வேலூர் அண்ணா சாலை சாரதி மாளிகை எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர் .
தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர் . சம்பந்தப்பட்டவர்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் . இதனை ஏற்றுக் கொண்ட தூய்மைபணியாளர்கள் மறியலைகைவிட்டனர் .
இதனால் அங்கு அரைமணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது . இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர் சாந்தகுமா ரி கொடுத்த புகாரின் பேரில் பெண் வியாபாரி கீதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu