/* */

வேலூர் மாநகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய மீன், இறைச்சி கடைகளுக்கு அபராதம்

வேலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மீன், இறைச்சி கடைகளுக்கு வருவாய்த்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்

HIGHLIGHTS

வேலூர் மாநகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய மீன், இறைச்சி கடைகளுக்கு அபராதம்
X

வேலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மீன், இறைச்சி கடைகளுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தனர்

வேலூர் மாநகராட்சி மக்கான் மீன்மார்க்கெட், இறைச்சி கடைகளில் இன்று கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து கலெக்டர் மீன்மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் ரகுராம், திவ்யபிரணவ், கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று காலை வேலூர் மக்கான் மீன்மார்க்கெட் மற்றும் சில்லரை மீன் விற்பனை நடைபெறும் தற்காலிக பஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு மற்றும் முககவசம் அணியாத வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கான் பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன்கடை முன்பு ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் குவிந்திருந்தனர். அதனால் அந்த கடையின் உரிமையாளருக்கு தாசில்தார் ரமேஷ் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

அதைத்தொடர்ந்து சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மீன், இறைச்சி கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத கடைகள், ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மீன், இறைச்சி கடைகள், ஓட்டலுக்கு என்று மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 27 Jun 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...