வேலூர் மாவட்டத்தில் நோய் தொற்றினை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள்: கலெக்டர்

வேலூர் மாவட்டத்தில் நோய் தொற்றினை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள்: கலெக்டர்
X
கொரோனா நோய் தொற்று பல மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றினை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் அறிவித்துள்ளார்

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . தற்போது கொரோனா நோய் தொற்று பல மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றினை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் கோட்டை பூங்கா, அமிர்தி மிருககாட்சி சாலை மற்றும் மாநகராட்சி, நகராட்சிக்குட்பட்ட அனைத்து பூங்காக்களும் பொதுமக்கள் நலன் கருதி மூடப்படுகிறது .

மேலும் அரசு வழி காட்டு நெறிமுறைகளின் படி, அனைத்து பஸ்களில் 50 சதவீதம் பொதுமக்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். ஓட்டல்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கவேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் ஓட்டல் உரிமையாளர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் , கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும்போது எங்கெங்கு அதிகமான கூட்டங்கள் காணப்படுகிறதோ, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சொந்தமான கடைகள், பலசரக்கு கடைகள், ஷோரூம்கள் , ஜவுளிக் கடைகள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம், உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் அதிக கூட்டம் கூடுவதைதவிர்க்க வேண்டும். இந்த தடையை மீறி செயல்படுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தக்க தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். பொதுமக்கள் நோய் தொற்றின் தீவிரத்தை அறிந்து மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படும் நடவடிக்கை ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!