பேரணாம்பட்டு வனத்தில் விலங்குகளுக்கு தண்ணீர்
ஃபைல் படம்
பேரணாம்பட்டு வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். அந்த வனப்பகுதியில் மான், கரடி, காட்டுப்பன்றி என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கொடிய காலத்தில் அந்த விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. இதனை தடுப்பதற்காக கோடைக்காலத்தில் வனத்துறை சார்பில் வனத்தில் அங்கங்கு தொட்டிகள் கட்டி அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பிவிடுவார்கள்.
விலங்குகள் ஊருக்குள் வருவதால் கிராமத்தினர் விலங்குகளை அடித்து கொன்றுவிடுவதும் உண்டு. மேலும் மனிதர்களை விலங்குகள் தாக்கும் நிகழ்வுகளும் நடக்கும். இதைப்போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பப்படுகின்றன.
வேலூர் மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா, உதவி வன அலுவலர் முரளிதரன் ஆகியோர் கூறியதன்படி கோடைக்காலத்தை முன்னிட்டு பேரணாம்பட்டு வனப்பகுதியில் வனச்சரகர் சங்கரய்யா தலைமையில் வனவர்கள் ஹரி, தரணி மற்றும் வனக் காப்பாளர் செல்வம், வனக் காவலர் ரவி ஆகியோர் 17 இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை டிராக்டர்கள் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu