குடியாத்தம்: மணல் கடத்தலை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி!

குடியாத்தம்: மணல் கடத்தலை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி!
X

மணல் கடத்தல் வழக்கில் கைதான டிரைவர்.

குடியாத்தத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் குடியாத்தத்தை அடுத்த மீனூர் கவுண்டன்யா மகாநதி ஆற்றுப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். ஆனால் அவர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றார்.

அதில் இருந்து தப்பிய இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார், டிராக்டரை மடக்கி அதை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர், குடியாத்தத்தை அடுத்த மீனூர் நடுக்கட்டை பகுதியைச் சேர்ந்த தரணி (வயது 34) எனத் தெரிய வந்தது. அவர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார், மணல் கடத்தல் மற்றும் டிராக்டரை ஏற்றி போலீசாரை கொல்ல முயன்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தரணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. தரணி மீது ஏற்கனவே மணல் கடத்தி வழக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil