குடியாத்தம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என கலெக்டர் தகவல்

குடியாத்தம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என கலெக்டர் தகவல்
X

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் 

குடியாத்தம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும், போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து சாலைககளும் சீரமைக்கப்படும் என கலெக்டர் தகவல்

குடியாத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று ஆய்வு மேற்கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வுக்கு பின் செய்தியாளரிடம் கூறும்போது,

குடியாத்தம் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகள் விரைவாக சீரமைக்கப்பட்டு வருகிறது. அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடியாத்தம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்றப்படும். தகுதியானவர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் அரசு சார்பாக செய்து தரப்படும்

கொரோனா மூன்றாம் அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அரசாங்க அறிவுறுத்தல் படி தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 31க்குள் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் இரண்டு கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்டுள்ள பஞ்சாயத்துகளையும் கண்டறிந்து அங்கும் தடுப்பூசி முகாம்களை அமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் செய்தியாளரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!