ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம்
X

குருவராஜபாளையம் கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை யானையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்

வேலூர் அடுத்த ஒடுகத்தூர் அருகே ஒற்றை யானை நடமாட்டம் காணப்பட்டதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர் . வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வனச்சரகத்திற்குஉட்பட்ட பகுதியில் கருத்தமலை காப்புக்காடு உள்ளது . இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் வழியாக காட்டு யானைகள் வந்து , மலையடிவாரம் அருகே உள்ள விவசாய நிலங்களில் இருக்கும் வாழை , நெல் , கரும்பு , மா உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வந்தன . வனத்துறையினர் நடவடிக்கை காரணமாக யானைகள் வெளியிடங்களுக்கு விரட்டப்பட்டது . அதன்பிறகு யானைகள் நடமாட்டம் இல்லை .

இந்நிலையில் நேற்று மாலை குருவராஜபாளையம் அருகே உள்ள காட்டுக்கோயிலுக்கு செல்லும் பாதையில் ஒற்றை யானை ஒன்று வந்து கொண்டிருந்தது . இதைக்கண்ட கிராம மக்கள் பீதியடைந்து தப்பி ஓடினர் . மேலும் இளைஞர்கள் சிலர் சென்று யானையை விரட்ட முயன்றனர். இருப்பினும் ஒற்றை யானை நீண்ட நேரம் அங்கேயே இருந்தது . பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது .

இதுகுறித்து தகவலறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் நேற்றிரவு வந்து பார்வையிட்டனர். இருப்பினும் இன்று காலை வரை யானையின் நடமாட்டம் இல்லை. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் , சாணாங்குப்பம் காப்புக்காடு பகுதியில் வழி தவறி ஒற்றை யானை ஊருக்குள் வர முயன்றுள்ளது . கிராம மக்கள் விரட்டியதால் யானை திரும்பிச்சென்று விட்டது . இருப்பினும் யானை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம் . இந்த யானை வழிதவறி இப்பகுதிக்குள் வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்தது என தெரிவித்தனர் .

பல ஆண்டுகளுக்கு பிறகு யானை ஊருக்குள் வர முயன்றதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர் .

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil