பெரணமல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குறித்து பயிற்சி முகாம்

பெரணமல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குறித்து பயிற்சி முகாம்
X

பயிற்சி முகாமின் போது பயிற்சி கையேடுகள் பேனா ஆகியவை வழங்கப்பட்டது.

பெரணமல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர்கள், சமூக நிறுவன ஒருங்கிணைப்பு செய்தல் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்தல் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தலைமை தாங்கிய குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சந்தோஷ் குமார் வரவேற்றார்.

பயிற்சியில் ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்தல் மற்றும் கிராம வளர்ச்சி குறித்து பயிற்சி அளிக்கப்-பட்டது. பயிற்சியை மாவட்ட பயிற்றுநர்கள் உமா ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

முகாமில் ஊராட்சி மன்ற தலைவர், கிராம கூட்டமைப்பு அளவிலான தலைவர், செயலாளர், பொருளாளர், கிராம வறுமை ஒழிப்பு செயலாளர், விவசாய உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர், உற்பத்தி குழு சமூக வலை பயிற்றுநர் உள்பட 6 பேர் கொண்ட ஒரு குழுவாக அமைத்து இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் 11 குழுக்களாக ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளில் உள்ள அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அனைவருக்கும் பயிற்சி கையேடுகள் பேனா ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் உதவியாளர் லோகேஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!