நகா்மன்ற தலைவரின் மகன் விபத்தில் உயிரிழப்பு..!

நகா்மன்ற தலைவரின் மகன்  விபத்தில் உயிரிழப்பு..!
X

கோப்பு படம்

வந்தவாசி அருகே வந்தவாசி நகராட்சி தலைவரின் மகன் பைக் விபத்தில் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி தலைவராக இருப்பவர் ஜலால். இவரது மகன் அப்துல் சுபைத். இவர் தனது நண்பா்களான வந்தவாசி காயிதேமில்லத் நகரைச் சோ்ந்த பகத் , பினாங்குகாதா்ஷா தெருவைச் சோ்ந்த ஜாபா்அலி ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே புறவழிச் சாலையில் சென்றபோது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அப்துல்சுபைது, பகத், ஜாபா்அலி ஆகிய மூவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஜாபர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்துல் சுபைது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல் சுபைது பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் உயிரிழந்த அப்துல் சுபைது தந்தை ஜலால் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி ராமு. இவரது மனைவி பச்சையம்மாள். இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில், ராமு மருதாடு கிராமத்தில் கட்டடப் பணியை முடித்துக் கொண்டு நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலை, கடைசிகுளம் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த பயணிகள் வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமு அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பச்சையம்மாள் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா