மழையால் சேதமான சாலை சீரமைப்பு பணிகள்

மழையால் சேதமான சாலை சீரமைப்பு பணிகள்
X

சாலை சீரமைக்கும் பணி

பெரணமல்லூர் அருகே மழையால் சேதமான சாலையை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

வந்தவாசி பெரணமல்லூர் பகுதியில் ஆவணியாபுரம் பகுதி அருகே செல்லும் ஆற்று படுகையில் உள்ள செய்யாறு அணைக்கட்டு நிரம்பி சாலையில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தை நெடுஞ்சாலை துறையினர் தடை செய்திருந்தனர்.

தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் சாலையில் தண்ணீர் ஓடியதால் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை ஓரத்தில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து வந்தவாசி நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை இன்று ஜேசிபி உதவியுடன் மண்ணை நிரப்பி சீரமைத்து வருகின்றனர். இந்த நெடுஞ்சாலை துறையினரின் உடனடி நடவடிக்கையால் தற்போது போக்குவரத்து சீரடைந்து வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!