விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்

விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்
X

நெல்வயலில் தேங்கி நிற்கும் வெள்ளநீர்

தொடர்ந்து பெய்து வரும் மழையால் வந்தவாசி அருகே விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்ததுள்ளன

வந்தவாசி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 91 ஏரிகள் உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வந்தவாசி நகர பயணியர் விடுதி எதிரே உள்ள ஏரி, உளுந்தை கிராம பெரிய ஏரி, சித்தேரி, பாதூர் கிராம சித்தேரி, பெரிய ஏரி, ஓசூர் கிராம பூதேரி, அமுடூர் மற்றும் படூர் கிராம காட்டேரி, பெரிய ஏரி, சித்தேரி உள்பட 79 ஏரிகள் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நிரம்பி உள்ளது.

பல ஏரிகள் நிறைந்து சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஓசூர் பூதேரி நிறைந்து சாலையின் குறுக்கே ஓடுவதால் மூடூர் உள்ளிட்ட கிராம மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடர் மழையையொட்டி ஸ்ரீரங்கராஜபுரம், கொடநல்லூர், கீழ்கொவளைவேடு உள்ளிட்ட இடங்களில் நெல்வயல்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து அரசு அதிகாரிகள் சேதங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
ai in future agriculture