பெற்றோரை இழந்த குழந்தைகள் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்ற எம்பி
கிராம சபை கூட்டத்தில் பேசிய தரணி வேந்தன் எம்பி
ஆரணி அருகே ஆகாரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்காக உடனடியாக தனது சம்பளமான ₹50,000 த்தை ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணி வேந்தன் வழங்கினார்.
தனது உயிர் உள்ளவரை இரு குழந்தைகளின் படிப்பு செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். மேற்கு அரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மன் சீனிவாசன் முன்னிலை வகித்தாா் ஊராட்சித் தலைவா் செல்வம் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் கலந்து கொண்டு தமிழக முதல்வரின் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.
பின்னா் அவா் வீடு கோரி மனு அளித்த 6 பேருக்கு அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்து வீடு கட்ட ஆணை வழங்க உத்தரவிட்டாா்.
குழந்தைகள் படிப்பு செலவை ஏற்ற எம்பி
பெற்றோரை இழந்து பாட்டி வீட்டில் வளர்ந்து வரும் ஹேமமாலினி மற்றும் கௌரிசங்கர் என்கின்ற குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கு உதவும் படி , ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் கோரிக்கை வைத்தார்.
அக்கோரிக்கையை உடனே ஏற்ற தரணி வேந்தன் எம்பி தனது சம்பள பணத்திலிருந்து ரூபாய் 50,000 காசோலையை அந்த சிறுவர்களிடம் உடனடியாக வழங்கினார் மேலும் தன் உயிர் உள்ளவரை இந்த சிறுவர்களின் படிப்பு செலவை தானே ஏற்றுக் கொள்கிறேன் என்று உறுதி அளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தனின் இந்த செயலை கண்டு குழந்தையின் உறவினர்கள் கிராம பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்தனர்.
இதைத் தொடா்ந்து, ரூ.5.50 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடையையும், ரூ.9 லட்சத்து 90 ஆயிரத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தையும் அவா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா் கௌரி, முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம், திமுக தொகுதி பொறுப்பாளா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் மணி, திமுக ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, எஸ்.மோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குமரேசன், கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்த்தனன், வட்டார வளா்ச்சி அலுவலா் தசரதராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே படூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடி நல திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் இளங்கோவன், ஒன்றிய குழு தலைவர் தமிழச்சி ,அரசு அலுவலர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய செயலாளர், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu