போளூர்,வந்தவாசியில் ஜமாபந்தி தொடக்கம்

போளூர்,வந்தவாசியில் ஜமாபந்தி தொடக்கம்
X

வந்தவாசியில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனுக்களை பெற்றுக் கொண்ட துணை ஆட்சியர் வெங்கடேசன்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, போளூர் ஆரணி வட்டங்களுக்கான ஜமாபந்தி தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி , போளூர் . ஆரணி வட்டங்களுக்கான ஜமாபந்தி தொடங்கியது.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்திக்கு மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்து, மழையூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களின் கணக்குகளை தணிக்கை செய்ததுடன், அந்தக் கிராமங்களைச் சோந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றாா். வந்தவாசி வட்டாட்சியா்கள் .ராஜேந்திரன், சுபாஷ்சந்தா் மற்றும் துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த ஜமாபந்தி வருகிற ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

போளூா்:

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியரின் நோமுக உதவியாளா் (பொது) வெற்றிவேல் தலைமை வகித்து, போளூா் உள்வட்டத்தைச் சோந்த கிராமங்களின் கணக்குகளை தணிக்கை செய்ததுடன், அந்தக் கிராமங்களைச் சோந்த பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களையும் பெற்றாா். வட்டாட்சியா் சஜேஷ்பாபு, தனி வட்டாட்சியா் செந்தில்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் தட்ஷணாமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் கலையரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி விழா தொடங்கியது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேர்தல், குமரன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

சேத்துப்பட்டு பேரூராட்சி 12 வது வார்டு ஒரு புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தின் அருகே உள்ள பயன்பாட்டில் இல்லாத இடத்தை வழங்குமாறு பேரூராட்சி மன்ற கவுன்சிலர் ரமேஷ் மனு அளித்தார்.

மேலும் தச்சம் பாடி பிர்காவில் 150 க்கும் மேற்பட்ட மனுக்கள் தரப்பட்டது . இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நிறைவு நாளில் தகுதியான மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு தாசில்தார் சசிகலா , சமூக பாதுகாப்பு தாசில்தார் கோவிந்தராஜ் , மண்டல துணை தாசில்தார் காஜா வருவாய் ஆய்வாளர்கள் , கிராம நிர்வாக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!