வந்தவாசி ஜமாபந்தியில் சுடுகாடு பாதை வசதி வேண்டி கிராம மக்கள் மனு

வந்தவாசி ஜமாபந்தியில் சுடுகாடு பாதை வசதி வேண்டி கிராம மக்கள் மனு
X

ஜமாபந்தியில் கலந்து கொண்ட கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1432 ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நடைபெற்று வருகிறது

வந்தவாசியில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார்.

அவரிடம் தேசூரை அடுத்த பெலகாம்பூண்டி கிராம மக்கள் சுடுகாட்டிற்கு பகுதிக்கு பாதை வேண்டியும், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வேண்டியும், பேருந்து வசதி, சாலை வசதி கோரியும் மனுக்களை அளித்தனர். அப்போது விவசாய சங்கத்தினர், துணை வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று தானிப்பாடி உள் வட்டத்தைச் சார்ந்த தானிப்பாடி, செ. ஆண்டாப்பட்டு, டி.வேலூர், சின்னியம்பேட்டை, ரெட்டியா பாளையம், மலையனூர் செக்கடி, மோத்தக்கல், ஆத்திப்பாடி, புத்துர் செக்கடி, போந்தை, நாராயண குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆட்சியர் முருகேஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் வட்டாட்சியர் அப்துல் ரகூப் துணை வட்டாட்சியர் விஜயகுமார் வருவாய் ஆய்வாளர் யுவராணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பட்டா ரத்து, யு.டி.ஆா். திருத்தம், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட 444 வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் முருகேஷ் உறுதியளித்தாா்.

போளூா்

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கேளூா் உள்வட்டத்தை சோந்த கேளூா், விளாகுப்பம், கல்வாசல், ஆத்தூவாம்பாடி, கட்டிபூண்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோந்த பொதுமக்களுக்கான ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நோமுக உதவியாளா் வெற்றிவேல் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 119 மனுக்களை பெற்றாா். இதில், வட்டாட்சியா் சஜேஷ்பாபு, தனிவட்டாட்சியா் செந்தில்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் தட்ஷணாமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் வரதராஜூலு, கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய்த்துறையினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்

செங்கம்

செங்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று இரண்டாம் நாளாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தேன்மொழி தலைமையில் ஜமாபந்தி நடந்தது.

அவரிடம் பாய்ச்சல், இறையூர் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களான கரியமங்கலம், சொர்பனந்தல், புதுக்குளம், கோனாகுட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இதில் வட்டாட்சியர் முனுசாமி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரேணுகா, துணை வட்டாட்சியர்கள் தமிழரசி, துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று சோமாசிபாடி வருவாய் உள் வட்டத்தை சேர்ந்த 25 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. திருவண்ணாமலை வருவாய் கோட்ட அதிகாரி மந்தாகினி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்டார்.

வட்டாட்சியர் சாப்ஜான், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், ஜமாபந்தி மேலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் வேணுகோபால், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தனபால், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story