வந்தவாசி பகுதியில் மழையால் ஏற்பட்ட சாலை சேதங்கள் ஆய்வு

வந்தவாசி பகுதியில் மழையால் ஏற்பட்ட சாலை சேதங்கள் ஆய்வு
X

கனமழை காரணமாக வந்தவாசியில் சேதமடைந்த சாலை

வந்தவாசி பகுதியில் மழையால் ஏற்பட்ட சாலை சேதங்களை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டது,

இந்நிலையில் கனமழையால் சாலைகள் பாதிப்பு அடைந்துள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது செய்யாறு கோட்ட பொறியாளர் ,வந்தவாசி உதவி கோட்ட பொறியாளர் ,உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!