டீக்கடையில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் எம்எல்ஏ

டீக்கடையில்  டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் எம்எல்ஏ
X

டீக்கடையில் முன்னாள் எம்எல்ஏ மோகன் டீ போட்டுக் கொடுத்து ஓட்டு சேகரித்தார்.

பெரணமல்லூர் பேரூராட்சியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து ஓட்டு சேகரித்தார்.

வந்தவாசியை அடுத்த பெரணமல்லூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் மற்றும் 12 வாக்கு சாவுடிகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் இந்த பேரூராட்சியில் உள்ள இரண்டாவது வார்டில் திமுக கூட்டணி, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மும்முனைப் போட்டியில் களம் காண்கின்றனர்.

இந்நிலையில் பெரணமல்லூர் எம்ஜிஆர் சிலை எதிரே அதிமுக அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ மாவட்ட செயலாளர் தூசி மோகன் திறந்து வைத்தார். அதன் பின்னர் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பஜார் வீதி, அஸ்தினாபுரம் 6ஆவது வார்டு பகுதியில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், நகரச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது பஜார் வீதியில் உள்ள ஒரு டீக்கடையில் முன்னாள் எம்எல்ஏ மோகன் டீ போட்டுக் கொடுத்து ஓட்டு சேகரித்தார்.

இதற்கு ஒருபடி மேலே சென்ற முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் அங்குள்ள முதியவர் காலைப்பிடித்து இந்த முறை இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என பவ்வியமாக ஓட்டு கேட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!