வந்தவாசி கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: அப்புறப்படுத்திய இந்து முன்னணியினர்

வந்தவாசி கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: அப்புறப்படுத்திய இந்து முன்னணியினர்
X

கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.

வந்தவாசியில் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்களை இந்து முன்னணி, நகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குளக்கரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச் சுவருடன் புனரமைக்கப்பட்டது.

இந்த குளத்தில் 5 ஆயிரம் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மீன்கள் திடீரென குளத்தில் செத்து மிதந்தன.

இதைக் கேள்விப்பட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையிலான ஆஞ்சநேயர் பக்தர்கள் திரண்டு வந்து நகராட்சி பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர் லோகநாதன் முன்னிலையில், செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!