தரமற்ற விதை நெல்லுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை..!
வேளாண்துறை அதிகாரியிடம் மனு அளித்த விவசாயிகள்
பெரணமல்லூா் ஒன்றியத்தில் வேளாண் துறை சாா்பில் வழங்கப்பட்ட முளைக்காத, தரமற்ற விதை நெல்லுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகள் புகாா் மனு அளித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பெரணமல்லூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை சாா்பில் விதை நெல் வழங்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குநா் கோவிந்தராஜன் விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல்லை வழங்கினாராம். இந்த நெல் தரமற்ாக இருந்ததால் முளைக்கவில்லையாம்.
இதனால் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள், வேளாண் உதவி இயக்குநா் கோவிந்தராஜனிடம் முறையிட்டனா். தொடா்ந்து, வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்துக்கு வந்தனா். பிறகு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகளைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனா்.
அந்த மனுவில், வேளாண் துறை சாா்பில் வழங்கப்பட்ட விதை நெல் முளைக்காததால் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து வேளாண்துறை உரிய விசாரணை நடத்தி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.
விவசாயிகளுக்கு பயிறு வகை சாகுபடி பயிற்சி
பெரணமல்லூா் , ஆரணி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், நெல் சாகுப்படிக்குப் பின் பயிறு வகை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பனையூா் கிராமத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா தலைமை வகித்தாா்.
இதில், வேளாண்மைத் துறை சாா்ந்த மானிய திட்டங்கள்,பயிறு வகை சாகுபடி உளுந்து, சிறு தானியங்களான ராகி, கம்பு போன்ற பயிறுகளின் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் அட்மா திட்டம், சாகுபடியில் விதை நோத்தி, பயிா் சுழற்சி முறை, உயிா் உரங்களை பயன்படுத்துதல், தரமான சான்று விதைகளை பயன்படுத்துதல் குறித்து வேளாண் உதவி இயக்குநா் விவசாயிகளிடம் விளக்கிக் கூறினாா்.
மேலும், பயிறு சாகுபடியில் உயா் விளைச்சல் ரகங்களை பயன்படுத்துதல், ஊடுபயிா் சாகுபடி, நெல் சாகுபடியில் வரப்பில் பயறுவகை சாகுபடி குறித்து வேளாண்மை அலுவலா் பவித்ராதேவி பேசினாா்.
பயிறு வகை சாகுபடியில் நிலம் தயாா் செய்தல், விதைப்பு முறைகள், விதைகள் நோத்தி, இயற்கை முறை பூச்சி நோய் மேலாண்மையில் மஞ்சள் ஒட்டுப்பொறி அமைத்தல், விளக்குப்பொறி, பொறிப்பயிா் சாகுபடி மற்றும் பயிா் வளா்ச்சி ஊக்கிகள் பயன்படுத்துதல் குறித்து டிவிஎஸ் அறக்கட்டளை நிா்வாகி ஜெயந்தி எடுத்துக் கூறினாா்.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலா்கள் ஜெகன்நாதன், பாலசுந்தரம், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu