வந்தவாசி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

வந்தவாசி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்
X

விசாரணையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர்

வந்தவாசி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், உரிய ஆவணங்களின்றி காரில் ரூ.2 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், கடலூா் மாவட்டம், ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினா் திருமணத்துக்கு பட்டுப் புடவை வாங்க காஞ்சிபுரம் செல்வதாகத் தெரிவித்தனா். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே, தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பொன்னுசாமியிடம் ஒப்படைத்தனர். பின்னர், பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட காவல் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில், தமிழ்நாட்டில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தமாக தவறான தகவல்களை ஊடகம் மற்றும் சமூகவலைதளத்தில் பரப்புபவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் தேர்தல் விதிமுறை மீறல், தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்புதல் மேலும் மதுவிலக்கு சம்மந்தமான குற்றங்கள் பற்றிய தகவலை பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் 24 மணிநேரமும் இயங்கிவரும் தேர்தல் காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண் 9600899330 தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!