வவ்வால்களை பாதுகாப்பதற்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடிய கிராம மக்கள்

மரங்களில் வவ்வால்கள்
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்துள்ள கே வி குப்பம் மற்றும் ராயண்டபுரம் பகுதிகளில் வாழும் கிராம மக்கள் வவ்வால்களை பாதுகாப்பதற்காக பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.
இயற்கையை சீரழிப்பதால் அரிய வகை பறவை, விலங்கு இனங்கள் அழிந்து வருகின்றன. செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு காரணமாக சிட்டுக்குருவிகளை நகர்ப்பகுதிகளில் பார்க்கவே முடிவதில்லை.
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்துள்ளது வி.பி.குப்பம் கிராமம். இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு குடியிருப்பு பகுதி நடுவே உள்ள ஆலமரத்தின் கீழ், காளியம்மன் கோவில் உள்ளது. அம்மனை கிராம மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு வரும் நிலையில், அந்த ஆலமரத்தில், 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசிக்கின்றன. இவற்றை தெய்வ அம்சமாக கருதி, கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இதனால், வவ்வால்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க, தீபாவளி கொண்டாட்டத்தின் போது, பட்டாசு வெடிப்பதை அந்த கிராம மக்கள், மூன்று தலைமுறைகளாக தவிர்த்து வருகின்றனர்.
ராயண்டபுரம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்துள்ள 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராயண்டபுரம் கிராமம். மலை, காடு, தென்பெண்ணையாறு சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. செழிப்பான விவசாய பூமி. இவற்றிக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக உள்ளது வவ்வால்கள் புகலிடம்.
இரண்டு அரச மரங்கள் மற்றும் ஒரு ஆல மரத்தில் வவ்வால்கள் கூட்டம் கூட் டமாக தொங்கிக்கொண்டு இருக்கின்றன. வவ்வால்கள் வசித்து வருவதால் கிராமத்திற்கு நன்மை என்று கிராம மக்கள் கருதுகின்றனர். மனித இனத்தால் வவ்வால் இனத்துக்கு ஆபத்து ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ப தில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.
வவ்வால் வாழும் பகுதி யில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து விட்டனர். தீபாவளி பண்டிகை யிலும் பட்டாசு வெடிக்காமல் பெரியவர்களுடன் இணைந்து இளசுகளும் தியாகம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் உள்ள 3 மரங்களில் வவ்வால்கள் வசித்து வருவதை பெருமையாக நினைக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு மேலாக, வவ்வால் இனம் வாழ்ந்து வருவதாக, எங்கள் கிராம பெரியவர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு தெரிந்த வரை 100 ஆண்டுகள். அதற்கும் மேலாகக் கூட இருக்கலாம்.
வவ்வால்கள் வசிப்பதால், ஊர் செழிப்பாக உள்ளது. அதனால், வவ்வால்களை நாங்கள் பாதுகாக்கிறோம். 7 ஆண்டுக்கு முன்பு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலர், வவ்வால்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது, ஒட்டு மொத்தமாக வவ்வால்கள் வெளியேறின. அதனால், நாங்கள் மனமுடைந்துவிட்டோம். சில மாதங்களுக்கு பிறகு, மீண்டும் வந்தன. அதனால், வவ்வால்களை துப்பாக்கியால் சுடவும், கல் கொண்டு எறிய அனுமதிப்ப தில்லை. இரவு நேரத்தில் இரை தேடி வெளியே செல்லும் வவ்வால்கள், அதிகாலையில் மீண்டும் வந்துவிடும்" என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பறவை, விலங்குகளை வேட்டையாடி அழிப்பவர்களுக்கு மத்தியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராயண்டபுரம், கே வி குப்பம் கிராம மக்கள் வவ்வால் இனத்தை பாதுகாத்து வருவது என்பது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu