கால்நடை டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

கால்நடை டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..!
X

கோப்பு படம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், மூலம் கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதி கிடைத்திடவும் மேலும் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திருவண்ணாமலை ஆவின் ஒன்றியத்தின் மூலம் பால் உற்பத்தியாளர்களின் பகுதியிலேயே கால் நடை மருத்துவ சிகிச்சை அவசர சிகிச்சை செயற்கை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒன்றியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஒன்பது கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் உள்ளன அதில் தற்போது காலியாக உள்ள ஆறு கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது,

எனவே ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விரும்பும் கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களின் உரிய பட்டப்படிப்பு கால்நடை மருத்துவர் கவுன்சில் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் வருகின்ற 16ஆம் தேதி காலை 11 மணிக்கு திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆவின் தலைமை அலுவலகம் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலூர் மெயின் ரோடு வேங்கிக்கால் திருவண்ணாமலை, என்ற இடத்தில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் அறிய 883842278. என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Feb 2024 2:42 AM GMT

Related News