அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¾ கோடி உண்டியல் காணிக்கை

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¾ கோடி உண்டியல் காணிக்கை
X
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ரூ.1¾ கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்களும், மேல்மருவத்தூர் பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். மார்கழி மாதம் பிறந்ததில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள், திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூ.1 கோடியே 78 லட்சத்து 89 ஆயிரத்து 35-ம், 363 கிராம் தங்கமும், 1,109 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்