வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சிப்பட்டறை
பயிற்சி பட்டறையில் உரையாற்றும் மாவட்ட ஊராட்சிகள் துணை இயக்குனர் லட்சுமி நரசிம்மன்
திருவண்ணாமலை மாவட்ட வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாடு மற்றும் குழந்தைகள் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினை மற்றும் அவற்றை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர சமூக மற்றும் பாலினம் சார்ந்த நியமனங்கள் பற்றிய புரிதலை ஆழப்படுத்துதல், கிராம மற்றும் வட்டார குழந்தை பாதுகாப்புக்குழு பற்றி செயல்முறை தெளிவை உருவாக்குதல், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தபடுபவது போன்றவற்றை குறித்து பயிற்சி அளித்தனர்,
மேலும், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டங்கள் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைப்படுத்துவதை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் உறுதி செய்வதற்கான திறனை மேம்படுத்துதல். மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் எடுக்கப்படும் முடிவுகளை வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களில் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிகள் துணை இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை . குழந்தை பாதுகாப்பு அலுவலர் சரண்யா சதீஷ், திட்ட அலுவலர் கந்தன், வழக்கறிஞர். சோபனா ராணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu