தையல் தொழிலாளிகள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
பைல் படம்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த ஆண்கள், பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயனடைய விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையாக உற்பத்தி அலகு ஏற்படுத்தலாம்.
இவர்கள் தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் இக்குழு நன்முறையில் செயல்பட இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவற்றுடன் அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு, குறு மற்றம் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
10 நபர்களும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். குழு உறுப்பினர்கள் மேற்கண்ட இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நிதியுதவி பெறற விரும்புகிறவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு மாவட்ட அளவில் தகுதியான குழுக்க அமைக்க உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் பெறப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான குழுக்களை தேர்வு செய்திட கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு தேர்வு செய்யும். அதன்படி தேர்வு செய்யப்படுவோர் விண்ணப்பங்கள் கலெக்டரின் பரிந்துரையுடன் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu