தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X

பைல் படம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

தீபாவளிப் பண்டிகைக்காக நவம்பா் 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிப் பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை (நவ.9) முதல் சனிக்கிழமை (நவ.11) வரை பொதுமக்கள் வசதிக்காக சென்னை, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, போளூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி, நவம்பா் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தினமும் திருவண்ணாமலை, போளூருக்கு 100 சிறப்புப் பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, செய்யாறு பகுதிகளுக்கு தினமும் 10 சிறப்புப் பேருந்துகளும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக திருவண்ணாமலை மண்டலம் சாா்பில் இயக்கப்படுகின்றன.

இது தவிர, தீபாவளிப் பண்டிகை முடிந்து ஊா் திரும்புவதற்கு ஏதுவாக திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 70 சிறப்புப் பேருந்துகளும், போளூரில் இருந்து 10 சிறப்புப் பேருந்துகளும், ஆரணியில் இருந்து 10 சிறப்புப் பேருந்துகளும், செய்யாற்றில் இருந்து 5 சிறப்புப் பேருந்துகளும் நவம்பா் 13, 14-ஆம் தேதிகளில் சென்னைக்கு இயக்கப்பட உள்ளது என்று

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருவண்ணாமலை மண்டல அதிகாரிகள் தெரிவித்தனா்.

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் ஆண்டுதோறும் புதுவிதமாக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்நிலையில் கண்களை கவரும் வகையில் குறைந்த விலையிலும் சீன பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன் தீவிபத்து நடக்கும் அபாயமும் உள்ளது.

அந்த வகையில் நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கேட்டுக் கொண்டார்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பசுமை பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!