அரசு சித்த மருத்துவர் பணிக்கு ஆட்சேர்ப்பு..!

அரசு சித்த மருத்துவர் பணிக்கு ஆட்சேர்ப்பு..!
X

கோப்பு படம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு சித்த மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள இரண்டு அரசு சித்த மருத்துவ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் கௌரவ செயலாளர் மற்றும் துணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

தேசிய நல்வாழ்வு குழுமம் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் சித்தா நலப் பணிகள் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரங்கள், சித்த மருத்துவ அலுவலர்,

கல்வி தகுதி, சித்தாவில் பி எஸ் எம் எஸ் எம் டி படிப்பு முடித்திருக்க வேண்டும். (BSMS/MD, siddha, Registration in respective board/ council of state such as Tamilnadu board of Indian medicine/TSMC/ TNHMC)

விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்று, கல்வி தகுதிக்கான மதிப்பெண் சான்று, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும்.

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி கௌரவ செயலாளர்/ துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம் துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை ,திருவண்ணாமலை என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பங்களை வருகின்ற 20 ம் தேதி அன்று மாலைக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!