தமிழக வெற்றி கழகம் சார்பில் மதிய உணவு..!

தமிழக வெற்றி கழகம் சார்பில் மதிய உணவு..!
X

திருவண்ணாமலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகம் மாவட்டத் தலைவர் பாரதிதாசன் மற்றும் நிர்வாகிகள்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று கழக பொது செயலாளர் ஆனந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் அண்டை மாநிலங்களிலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, செங்கம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி ,போளூர், கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பாரதிதாசன் தலைமையில் சுமார் 50,000 பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் பாரதிதாசன் தலைமை வகித்து சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார் . நிகழ்ச்சியில் நகர ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் வந்தவாசி தெள்ளாறு , ஆகிய பகுதிகளில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் மத்திய உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமையில்,மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உதயகுமாா், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுமன், ஒன்றிய செயலாளர், வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மத்திய உணவு வழங்கினர் . இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணா சிலை அருகில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நகர இளைஞரணி தலைவர் திருமுருகன் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

தொடர்ந்து ஆரணி மணி கூண்டு அருகில் நகர தலைவர் முருகன் தலைமையில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் அசோக்குமார் ,இளைஞரணி துணைத் தலைவர் ஹரிஷ், நகர பொறுப்பாளர் பரணி மற்றும் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!