உர மானியத்தை உயர்த்தி வழங்கிட விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்

உர மானியத்தை உயர்த்தி வழங்கிட விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்
X
உர மானியத்தை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாய சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

2010 பாராளுமன்ற கூட்டத்தொடரில் உரத்துறை அமைச்சர் கூறுகையில் தனியார் உர நிறுவனங்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது. மாறாக விவசாயிகளுக்கு மானியம் வழங்க முடியும் என்று கூறினார்.

உர மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், அப்படி வழங்கினால் மட்டுமே விவசாய உற்பத்தியை பெருக்க முடியும் என்பதனை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக தமிழக விவசாய சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உர மானியத்தை உயர்த்தி வழங்கக் கோரி செல்லாத 2000 ரூபாய் நோட்டினை விவசாயிகள் காற்றில் பறக்கவிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். மேலும் கிசான் நிதியை உடனடியாக வழங்குவது, பட்டா தாரர்களுக்கு பட்டா பதிவு செய்வது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story