கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டத்தில் கலெக்டர் சந்திப் நந்தூரி மற்றும் ப்ரியா துறை அதிகாரிகள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சந்திப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாக கூட்டரங்கில் கலெக்டர் சந்திப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால், இணை இயக்குநர் சுகாதரப் பணிகள் கண்ணகி, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை நகராட்சி, பேரூராட்சி, உணவு பாதுகாப்பு துறை, அறநிலைய துறை, பொதுப் பணித்துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கோவிட்-19 நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, நோய் பரவும் விகிதம், அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை, இறப்புவிகிதம், Covid care centre தொடர்பான விவரங்களை கேட்டறிந்து உரிய ஆலோசனைகள் வழங்கினார்.
45 வயதிற்கு மேற்பட்டநபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் உரிய அபராதம் விதித்து அவர்களுக்கு நோய் பரவலில் இருந்து காத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
பொது இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்து பொருட்களின் கையிருப்பு, தேவையின் அளவு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு மற்றும் அங்குள்ள கழிப்பிடங்களை துய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தினார்.
அரசு அலுவலகங்கள், வழிபாட்டுதலங்கள், வணிகவளாகங்கள், ஓட்டல்கள், பூங்காக்கள் மற்றும் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அதனை கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். தொழிற்சாலைகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படத் தவறினால் உரிய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu