வங்கி கணக்குகளை துவங்க மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தல்

வங்கி கணக்குகளை துவங்க மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தல்
X

 மாணவ மாணவிகளுக்கு வங்கி கணக்கு புத்தகத்தை  வழங்கிய ஆட்சியர் 

அரசு நிதி உதவியை விரைந்து பெறுவதற்கு வங்கிக் கணக்குகளை தொடங்குங்கள் என கலெக்டர் வலியுறுத்தினார்.

தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் அரசின் நிதி உதவியை பெற கல்லூரி மாணவ, மாணவிகள் விரைந்து வங்கி கணக்குகளை தொடங்க வேண்டும், என்று வலியுறுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தலைமையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு புதியதாக வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பேசுகையில் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கும் இத்திட்ட த்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்புதல்வன் என்ற திட்டம் துவங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் கல்லூரி படித்து வருகின்ற மாணவர்களுக்கு வங்கி கணக்குகள் துவங்குவதன் மூலம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு மாதந்தோறும் ரூபாய் 1000 ஆயிரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மாணவர்கள் இந்த தொகையை கல்விச் செலவுக்காக அல்லது கல்வி பயில்வதற்காக பயன்படுத்தி கொள்ளும்போது அவர்கள் வாழ்க்கையில்மேன்மேலும் உயர முடியும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

அதனடிப்படையில் நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் 4024 மாணவர்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்படவுள்ளது. வங்கி கணக்குகள் துவங்குவதன் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் வழங்குகின்ற தொகை மாதந்தோறும் நேரடியாக அவர்கள் கணக்கில் செலுத்த முடியும். எனவே, மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விரைந்து வங்கி கணக்குகளை தொடங்ககேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் பேசினார்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி கணக்கு புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இம்முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) சரண்யா, அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
importance of ai in healthcare